தமிழ் முற்றாக யின் அர்த்தம்

முற்றாக

வினையடை

உயர் வழக்கு
  • 1

    உயர் வழக்கு முற்றிலும்; முழுவதுமாக.

    ‘எந்த நாகரிகத்தையும் முற்றாக அழித்துவிட முடியாது’
    ‘பழமையை முற்றாக நிராகரிக்க வேண்டும் என்று நான் கூறவில்லை’
    ‘கட்சித் தலைமைப் பதவிக்கு நான் போட்டியிடப் போவதாகச் சிலர் கூறியிருப்பதை முற்றாக மறுக்கிறேன்’