தமிழ் முற்றிலும் யின் அர்த்தம்

முற்றிலும்

வினையடை

 • 1

  முழுமையான அளவில்; முழுவதும்.

  ‘நான் சொல்வது முற்றிலும் உண்மை’
  ‘சில வகை மீன் இனங்கள் முற்றிலும் அழிந்துவிட்டன’
  ‘அவருடைய இலக்கிய நோக்கு முற்றிலும் மாறுபட்டது’
  ‘இந்த அனுபவம் எனக்கு முற்றிலும் புதியது’
  ‘அவருடைய கோரிக்கை முற்றிலும் நிராகரிக்கப்பட்டது’