தமிழ் முற்று யின் அர்த்தம்

முற்று

வினைச்சொல்முற்ற, முற்றி

 • 1

  (சில மரங்கள், காய்கள்) அதிகபட்ச வளர்ச்சியை அடைதல்.

  ‘முருங்கைக்காய் முற்றுவதற்கு முன்பே பறித்துவிடு’
  ‘முற்றிய தேங்காயாகப் பார்த்து வாங்கி வா!’
  ‘முற்றிய மரம் என்பதால் அறுப்பதற்குச் சிரமமாக இருந்தது’

 • 2

  (நோய்) குணப்படுத்த முடியாத நிலையை அடைதல்.

  ‘நோயை முற்ற விட்டுவிடாதே’
  ‘மார்பில் புற்று நோய் முற்றிவிட்டது’

 • 3

  (சண்டை, பிரச்சினை முதலியவை) தீவிர நிலையை அடைதல்.

  ‘அவர்களுக்குள் தகராறு முற்றிக் கைகலப்பில் முடிந்தது’
  ‘வேலைநிறுத்தம் செய்யும் அளவுக்குத் தொழிலாளர் பிரச்சினை எப்படி முற்றியது?’

 • 4

  (‘முற்றும்’, ‘முற்றிற்று’ ஆகிய வடிவங்கள் மட்டும்) (தொடர்ந்து கொண்டிருப்பது) முடிவுக்கு வருதல்; முடிதல்.

  ‘கதை இந்த இதழோடு முற்றிற்று’