தமிழ் முற்றுகையிடு யின் அர்த்தம்

முற்றுகையிடு

வினைச்சொல்-இட, -இட்டு

 • 1

  (போர்ப் படை) ஓர் இடத்தைச் சுற்றிவளைத்தல்.

  ‘சேரனின் படைகள் தகடூரை முற்றுகையிட்டன’
  ‘ஆங்கிலேயர்கள் ஜான்சியை முற்றுகையிட்டனர்’

 • 2

  (ஆட்கள் பெருமளவில்) ஒரு இடத்தில் கூடுதல்.

  ‘தீபாவளியை முன்னிட்டு நகைக் கடைகளில் பெண்கள் முற்றுகையிட்டனர்’
  ‘தேர்தலில் சீட்டு வாங்குவதற்காகக் கட்சிக்காரர்கள் தலைமை அலுவலகத்தை முற்றுகையிட்டனர்’
  ‘காலிக் குடங்களுடன் நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிடப் பெண்கள் முடிவுசெய்துள்ளனர்’