தமிழ் முற்றுப்புள்ளி யின் அர்த்தம்

முற்றுப்புள்ளி

பெயர்ச்சொல்

 • 1

  பொருள் முழுமை பெற்ற தொடரின் அல்லது வாக்கியத்தின் இறுதியில் இடப்படும் குறி.

  ‘வாக்கியத்தின் இந்த இடத்தில் நீ முற்றுப்புள்ளிக்குப் பதில் அரைப்புள்ளி வைக்க வேண்டும்’

 • 2

  (ஒன்று) மேற்கொண்டு தொடராத நிலை.

  ‘இந்தப் பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்’
  ‘படிப்புக்கு முற்றுப்புள்ளி என்று முடிவுசெய்துவிட்டாயா?’