முறி -க்காக தமிழ்இல் உள்ள முக்கிய விளக்கங்கள்:

முறி1முறி2முறி3முறி4முறி5

முறி1

வினைச்சொல்முறிய, முறிந்து, முறிக்க, முறித்து

 • 1

  (மரம், குச்சி, எலும்பு முதலியவை விசையின் காரணமாக) ஒடிதல்; துண்டாதல்.

  ‘புயலில் மரம் முறிந்து சாய்ந்தது’
  ‘விபத்தில் கை எலும்பு முறிந்துவிட்டது’

 • 2

  (பேச்சுவார்த்தை, உறவு போன்றவை) மேற்கொண்டு தொடர முடியாத நிலையை அடைதல்.

  ‘தீவிரவாதிகளுடன் அரசு நடத்திய பேச்சுவார்த்தை முறிந்துவிட்டது’
  ‘அவர்கள் இடையே இருந்த நல்லுறவு முறியக் காரணம் என்ன?’

முறி -க்காக தமிழ்இல் உள்ள முக்கிய விளக்கங்கள்:

முறி1முறி2முறி3முறி4முறி5

முறி2

வினைச்சொல்முறிய, முறிந்து, முறிக்க, முறித்து

 • 1

  (பால், பாகு போன்றவை) தன்மை மாறுதல்; பதம் கெடுதல்.

  ‘ஒரு சொட்டு எலுமிச்சம் சாறு விட்டால் பால் முறிந்துபோகும்’
  ‘பாகு காய்ச்சும்போது முறிந்துவிடாதவாறு பார்த்துக் கொள்வது முக்கியம்’

 • 2

  (சளி, விஷம் போன்றவற்றின் பாதிப்பு) நீங்குதல்.

  ‘‘விஷம் முறிந்துவிட்டதால் இனி பயப்படத் தேவையில்லை’ என்று வைத்தியர் கூறினார்’
  ‘மருந்துகளின் வீரியத்தைச் சிறுகீரை முறியச் செய்துவிடுமாம்’

 • 3

  இலங்கைத் தமிழ் வழக்கு (போதை) தெளிதல்.

  ‘மனுஷன் ராத்திரி போட்டதே இன்னும் முறியவில்லையோ என்று யோசித்தாள்’

முறி -க்காக தமிழ்இல் உள்ள முக்கிய விளக்கங்கள்:

முறி1முறி2முறி3முறி4முறி5

முறி3

வினைச்சொல்முறிய, முறிந்து, முறிக்க, முறித்து

 • 1

  (நீண்ட உறுதியான பொருளை) துண்டாக்குதல்; ஒடித்தல்.

  ‘சவுக்குக் கட்டையை முறித்து அடுப்பில் வை’
  ‘கட்டையால் அடித்துக் காலை முறித்துவிட்டான்’
  ‘‘கையை முறித்துவிடுவேன்’ என்று பயமுறுத்தினான்’

 • 2

  (பேச்சு வார்த்தை, உறவு முதலியவற்றை) துண்டித்தல்; நிறுத்துதல்; முடித்துக்கொள்ளுதல்.

  ‘போராளிகள் அரசுடன் நடத்திவந்த பேச்சுவார்த்தையை முறித்துக்கொண்டுள்ளனர்’
  ‘அந்த நிறுவனம் எங்களோடு கொண்டிருந்த உறவை முறித்துக்கொண்டது’

முறி -க்காக தமிழ்இல் உள்ள முக்கிய விளக்கங்கள்:

முறி1முறி2முறி3முறி4முறி5

முறி4

வினைச்சொல்முறிய, முறிந்து, முறிக்க, முறித்து

 • 1

  (விஷம், சளி போன்றவற்றின் பாதிப்பை) நீக்குதல்.

  ‘இந்த மருந்து விஷத்தை முறிக்கும்’
  ‘பனங்கற்கண்டு சளியை முறிக்கும் என்பார்கள்’
  ‘பாம்பு விஷத்தை முறிப்பதற்கான மருந்தைப் பாம்பின் விஷத்திலிருந்தே எடுக்கிறார்கள்’

 • 2

  வட்டார வழக்கு (சில்லறை) மாற்றுதல்.

  ‘ஐந்து ரூபாய்க்குச் சில்லறை முறித்துக்கொண்டு வா!’

முறி -க்காக தமிழ்இல் உள்ள முக்கிய விளக்கங்கள்:

முறி1முறி2முறி3முறி4முறி5

முறி5

பெயர்ச்சொல்

இலங்கைத் தமிழ் வழக்கு
 • 1

  இலங்கைத் தமிழ் வழக்கு (மீனை) துண்டாக வெட்டிய பகுதி; துண்டு.

  ‘தலை முறியைப் போட்டுச் சொதி வைத்துவிட்டு, வால் முறியைப் பொரித்துவிடு’
  ‘நடு முறியைக் குழம்பு வை’