தமிழ் முறியடி யின் அர்த்தம்

முறியடி

வினைச்சொல்முறியடிக்க, முறியடித்து

 • 1

  (சதி, தாக்குதல், விரோதச் செயல் முதலியவற்றை அல்லது எதிரிகளை) தோல்வியடையச் செய்தல்; செயலிழக்கச் செய்தல்; (ஒன்று வெற்றிகரமாக) நடக்கவிடாமல் செய்தல்.

  ‘தங்கக் கடத்தல் முயற்சி வெற்றிகரமாக முறியடிக்கப்பட்டது’
  ‘எதிர்க்கட்சிகளின் பொய்ப் பிரச்சாரத்தை முறியடிப்போம்’
  ‘கால்பந்தாட்டத்தில் எதிரணியின் வியூகங்களைத் திறமையாக முறியடிப்பதில் மரடோனா வல்லவர்’
  ‘பாராளுமன்றத்தின் மீதான தாக்குதல் முறியடிக்கப்பட்டது’

 • 2

  (புதிய சாதனை படைத்து ஏற்கனவே நிகழ்த்தப்பட்ட சாதனையை) பின்னுக்குத் தள்ளுதல்; முந்துதல்.

  ‘இந்த வருட உலகக் கோப்பைக் கால்பந்துப் போட்டிகளில் பழைய சாதனைகள் பல முறியடிக்கப்பட்டன’
  ‘தமிழ் நாட்டில் அதிக நாட்கள் ஓடிச் சாதனை புரிந்த ‘ஹரிதாஸ்’ என்ற படத்தின் சாதனை நீண்ட காலமாக முறியடிக்கப்படாமல் இருந்தது’