தமிழ் முறிவு யின் அர்த்தம்

முறிவு

பெயர்ச்சொல்

 • 1

  (எலும்பு) உடைதல்; துண்டாதல்.

  ‘எலும்பு முறிவு காரணமாக அவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்’

 • 2

  (பேச்சுவார்த்தை, உறவு, தொடர்பு போன்றவை) நீடிக்காமல் போகும் நிலை.

  ‘இந்தப் பேச்சுவார்த்தை முறிவுக்கு யார் காரணம்?’
  ‘தங்கள் நட்பின் முறிவை இரு நடிகர்களும் வெளிப்படையாகவே ஒப்புக்கொண்டுள்ளனர்’