தமிழ் முறுக்கு யின் அர்த்தம்

முறுக்கு

வினைச்சொல்முறுக்க, முறுக்கி

 • 1

  (துணி முதலியவற்றை) சுருட்டித் திருகுதல்.

  ‘ஜமுக்காளத்தை நன்றாக முறுக்கிப் பிழிந்து காயப்போடு’
  ‘மீசையை முறுக்கிக் கொண்டே பேசினார்’

 • 2

  (திருகாணி போன்றவற்றை) திருகுதல்.

  ‘திருகாணியை இதற்கு மேல் முறுக்க முடியாது’

 • 3

  (நார் முதலியவற்றைத் திரித்துக் கயிறு) தயாரித்தல்.

 • 4

  (பிறர் தன்னை மதிக்க வேண்டும் என்று எதிர்பார்த்து) ஒருவித இறுக்கத்துடன் நடந்துகொள்ளுதல்.

  ‘புது மாப்பிள்ளை கொஞ்ச நாள் அப்படித்தான் முறுக்கிக்கொள்வார்!’

 • 5

  இலங்கைத் தமிழ் வழக்கு (பெரும்பாலும் வயிற்றைக் குறித்து வரும்போது) வலித்தல்.

  ‘காலையிலிருந்தே வயிற்றை முறுக்கிக்கொண்டிருக்கிறது’

தமிழ் முறுக்கு யின் அர்த்தம்

முறுக்கு

பெயர்ச்சொல்

 • 1

  முறுக்கப்பட்ட நிலை.

  ‘முறுக்கு மீசை’
  ‘முறுக்குக் கயிறு’

 • 2

  (உடல்) வலிமைக்கு உரிய உறுதி.

  ‘வயதாகிவிட்டாலும் உடல் முறுக்கு இன்னும் தளரவில்லை’

 • 3

  மிடுக்கு.

  ‘வாலிப முறுக்கில் பேசுகிறான்’

தமிழ் முறுக்கு யின் அர்த்தம்

முறுக்கு

பெயர்ச்சொல்

 • 1

  அரிசி மாவையும் உளுத்தம் மாவையும் பிசைந்து அச்சில் இட்டுப் பிழிந்து எண்ணெயில் பொரித்துச் செய்யப்படும் ஒரு தின்பண்டம்.