தமிழ் முறுகு யின் அர்த்தம்

முறுகு

வினைச்சொல்முறுக, முறுகி

 • 1

  (பாகு, பால் போன்றவை சூட்டால்) நீர்த்தன்மை குறைந்து இறுகுதல்.

  ‘சர்க்கரைப் பாகு முறுகாமல் பார்த்துக்கொள்!’
  ‘முறுகக் காய்ச்சிய பால்’

 • 2

  இலங்கைத் தமிழ் வழக்கு (தசை) முறுக்கேறி வலிமையாகக் காணப்படுதல்.

  ‘அவனுடைய கைகள் முறுகியிருந்தன’