தமிழ் முறையிடு யின் அர்த்தம்

முறையிடு

வினைச்சொல்முறையிட, முறையிட்டு

  • 1

    (தீர்வுக்காக அல்லது உரிய நடவடிக்கைக்காக) மனக்குறை, வேண்டுகோள், கோரிக்கை போன்றவற்றை ஒருவரிடம் சொல்லுதல்.

    ‘மின்சாரக் கட்டணத்தைக் குறைக்குமாறு விவசாயிகள் அமைச்சரிடம் முறையிட்டனர்’
    ‘நகராட்சி அதிகாரிகளிடம் பல தடவை முறையிட்டும் சாலை செப்பனிடப்படவில்லை’
    ‘சிங்க ராஜா தங்களைக் கொடுமைப்படுத்துவதாக எல்லா விலங்குகளும் நரியிடம் முறையிட்டன’