தமிழ் முள் யின் அர்த்தம்

முள்

பெயர்ச்சொல்

 • 1

  (தாவரத்தின் தண்டு, இலை, கிளை முதலிய பகுதிகளில்) மெல்லியதாகக் கூரான முனையுடன் சற்று நீட்டிக்கொண்டிருக்கும் பகுதி.

  ‘காலில் முள் குத்திவிட்டது.’

 • 2

  மேலே குறிப்பிடப்பட்ட முட்களைக் கொண்ட தாவரங்களைக் குறிப்பிடும் பொதுச் சொல்.

  ‘முள்செடி’
  ‘முள்புதர்’
  ‘வேலி கட்ட முள் வெட்டிக்கொண்டு வா’

 • 3

  (முள்ளம்பன்றி, முள்ளெலி போன்ற உயிரினங்களில்) கூர்மையாகவும் விறைப்பாகவும் கம்பிபோலவும் இருக்கும் தசை.

  ‘முட்களைச் சிலிர்த்துக் கொண்டு ஒரு முள்ளம்பன்றி புதருக்குப் பின்னால் நின்றுகொண்டிருந்தது’

 • 4

  (கடிகாரத்தில் மணியையும் தராசில் எடையையும் சில வகைக் கருவிகளில் அளவையும் காட்ட) மெல்லியதாகவும் நீளமாகவும் இருக்கும் உலோகத்தால் ஆன பாகம்.

  ‘பெரிய முள் எட்டு மணியைக் காட்டியது’
  ‘தராசில் முள் துல்லியமாக நின்றது’

 • 5

  (மீனின்) எலும்பு.

  ‘மீன் முள் தொண்டையில் சிக்கிக்கொண்டுவிட்டது’

 • 6

  தூண்டில் முனையில் இணைக்கப்படும் சிறிய கொக்கி.

  ‘அவன் மீன் பிடிப்பதற்காக முள்ளில் புழுவைச் செருகினான்’