தமிழ் முளைகட்டு யின் அர்த்தம்

முளைகட்டு

வினைச்சொல்-கட்ட, -கட்டி

  • 1

    (ஊற வைத்த விதையை நீரில்லாமல் மூடிவைத்து) முளை வரும்படி செய்தல்/(ஈரத்தின் காரணமாக விதையிலிருந்து) முளை வெளிவருதல்.

    ‘இந்த நெல்லை மூட்டை கட்டித் தொட்டியில் போட்டு முளைகட்டலாம்’
    ‘முளைகட்டிய கொண்டைக்கடலையில் புரதச் சத்து அதிகம்’