தமிழ் முளைவிடு யின் அர்த்தம்

முளைவிடு

வினைச்சொல்-விட, -விட்டு

 • 1

  (விதை போன்றவற்றிலிருந்து) முளை கிளம்புதல்.

  ‘அவரை விதை முளைவிட்டது’

 • 2

  (குறிப்பிட்ட சூழலில் ஒரு எண்ணம், உணர்வு, நிலை போன்றவை ஒன்றிலிருந்து) தோன்றுதல்; உருவாதல்.

  ‘வேலித் தகராறின்போதுதான் அவர்களுக்கு இடையே குரோதம் முளைவிட்டது’
  ‘முதன்முதலில் அவளைப் பார்த்தபோதே அவளைத்தான் திருமணம் செய்துகொள்ள வேண்டும் என்ற எண்ணம் என் மனத்தில் முளைவிட்டது’