தமிழ் முழக்கம் யின் அர்த்தம்

முழக்கம்

பெயர்ச்சொல்

 • 1

  (இடி முதலியவை எழுப்பும் அல்லது பல ஒலிகள் ஒருசேர ஒலிப்பதால் எழும்) பேரொலி.

  ‘இடி முழக்கம்’
  ‘மேள முழக்கத்தோடு நிகழ்ச்சிகளை கட்டியது’

 • 2

  மிகுந்த சத்தத்துடனும் உணர்ச்சியுடனும் எழுப்பப்படும் கோஷம் அல்லது பேசப்படும் பேச்சு.

  ‘நிர்வாகத்தை எதிர்த்து முழக்கமிட்டவாறு தொழிலாளர்கள் ஊர்வலமாக வந்தனர்’
  ‘அவருடைய மேடை முழக்கத்தில் கூட்டமே கட்டுண்டுகிடந்தது’