தமிழ் முழங்கு யின் அர்த்தம்

முழங்கு

வினைச்சொல்முழங்க, முழங்கி

 • 1

  (இடி, பீரங்கி போன்றவை அல்லது வாத்தியங்கள்) பேரொலி எழுப்புதல்.

  ‘இடி முழங்கி மின்னல் வெட்டிப் பலத்த மழை பெய்தது’
  ‘குடியரசுத் தலைவர் தேசியக் கொடியை ஏற்றும்போது பீரங்கிகள் முழங்கின’
  ‘மேளம் முழங்க ஊர்வலம் பிரமாதமாக நடந்தது’

 • 2

  உரக்கக் கூறுதல்; (மேடையில்) ஆரவாரத்துடன் பேசுதல்.

  ‘நிர்வாகத்திற்கு எதிரான கோஷங்களைத் தொழிலாளர்கள் முழங்கினார்கள்’
  ‘செயல்படுத்த முடியாத திட்டங்களை மேடையில் முழங்கி என்ன பயன்?’