தமிழ் முழுக்கமுழுக்க யின் அர்த்தம்

முழுக்கமுழுக்க

வினையடை

  • 1

    முழு அளவில்; முழுமையாக; முழுவதும்.

    ‘இந்தத் தொழிற்சாலை முழுக்கமுழுக்க இந்தியாவில் தயாரான பொருள்களைக் கொண்டே உருவாக்கப்பட்டது’
    ‘கல்யாணச் செலவுக்கு முழுக்கமுழுக்க உன்னையே நம்பியிருக்கிறேன்’
    ‘அவருடைய குற்றச்சாட்டுகளை முழுக்கமுழுக்கப் பொய் என்றும் கூறிவிட முடியாது’