தமிழ் முழுக்கு யின் அர்த்தம்

முழுக்கு

பெயர்ச்சொல்

 • 1

  நீரில் தலை அமிழும்படி முங்கிக் குளித்தல்.

  ‘ஆற்றில் மூன்று முழுக்குப் போட்டுவிட்டுக் கரைக்கு வந்தார்’

 • 2

  குளியல்.

  ‘ஒரு வாரம் எண்ணெய் முழுக்குத் தவறினாலும் உடம்பு சூடாகிவிடும் என்பாள் பாட்டி’

 • 3

  (தொடர்பு, செயல் போன்றவற்றுக்கு) முழுக்குப்போடும் நிலை.

  ‘நான் அரசியலுக்கு வந்துவிட்டதால் இனி நடிப்புக்கு முழுக்குதான்’
  ‘‘படிப்புக்கு முழுக்கு’ என்ற முடிவை எடுத்தபின் குடும்பக் கஷ்டத்தைப் போக்குவதற்காகச் சிறுசிறு வேலைகள் செய்தேன்’