தமிழ் முழுகு யின் அர்த்தம்

முழுகு

வினைச்சொல்முழுக, முழுகி

 • 1

  (ஒன்று அல்லது ஒருவர்) நீர்ப்பரப்பின் உட்செல்லுதல்; மூழ்குதல்.

  ‘குடம் தண்ணீரில் முழுகுகிறது, சீக்கிரம் எடு’
  ‘நீந்திக்கொண்டிருந்தவன் சுழலில் சிக்கி முழுகிவிட்டான்’

 • 2

  குளித்தல்.

  ‘வாரம் ஒரு முறை எண்ணெய் தேய்த்து முழுகு’
  ‘ஆற்றில் முழுகிவிட்டு வா’

 • 3

  (கடனைத் திருப்பித் தர முடியாததால் அடமானம் வைத்த பொருள், வியாபாரம் முதலியவை) மீட்க முடியாத நிலைக்கு உள்ளாதல்.

  ‘வீடு கடனில் முழுகிவிட்டது’