தமிழ் முழுநேரம் யின் அர்த்தம்

முழுநேரம்

பெயர்ச்சொல்

 • 1

  வேலை, படிப்பு போன்றவற்றில் அவற்றுக்கு உரிய முழுக் கால அளவு.

  ‘முழுநேரமாகவோ பகுதி நேரமாகவோ பணிபுரிய ஆட்கள் தேவை’
  ‘மருந்தாளுநர்கள் முழுநேரப் பணியாளர்களாக இருக்க வேண்டும்’
  ‘கல்லூரியின் முழுநேர மாணவர்களுக்கு மட்டுமே இந்தச் சலுகை பொருந்தும்’

 • 2

  (பெரும்பாலும் பெயரடையாக) அரசியல், கலை, இலக்கியம், சேவை போன்றவை தொடர்பாக வரும்போது வேறு ஒரு பணியில் இல்லாமல் குறிப்பிடப்படுவதையே தனது முக்கியப் பணியாகச் செய்யும் நிலை.

  ‘முழுநேர அரசியல்வாதியாகிவிட்டீர்கள் போலிருக்கிறது?’
  ‘அவர் ஒரு முழுநேர நாடகக் கலைஞர் அல்ல. வங்கி ஒன்றில் பணி புரிந்துகொண்டே ஓய்வு நேரத்தில் நாடகப் பணியில் ஈடுபடுகிறார்’