தமிழ் முழுமூச்சு யின் அர்த்தம்

முழுமூச்சு

பெயர்ச்சொல்-ஆக

  • 1

    ஒருவர் தனது முழுத் திறமையையும் சக்தியையும் ஒரு செயலில் தீவிரமாக ஈடுபடுத்தும் தன்மை.

    ‘சாலையை அகலப்படுத்தும் பணி முழுமூச்சில் நடைபெற்றுவருகிறது’
    ‘அவர் தனது மற்ற வேலைகளை உதறிவிட்டு மொழி ஆராய்ச்சியில் முழுமூச்சுடன் ஈடுபட்டார்’
    ‘அணைகளின் உயரத்தை அதிகரிப்பதை எங்கள் அரசு முழுமூச்சாக எதிர்க்கிறது’