தமிழ் முழுவது யின் அர்த்தம்

முழுவது

பெயர்ச்சொல்

 • 1

  எல்லாம்; அனைத்து.

  ‘நான்கு வாரங்களாகப் பூட்டிக்கிடந்ததில் வீடு முழுவதும் தூசி’
  ‘குழந்தை இரவு முழுவதும் தூங்கவில்லை’
  ‘நேற்று முழுவதும் மின்சாரம் வரவில்லை’
  ‘நாடு முழுவதும் சுதந்திர தினத்தை உற்சாகமாகக் கொண்டாடினர்’
  ‘புத்தகம் முழுவதையும் நான் படித்து முடித்துவிட்டேன்’
  ‘இந்தப் படம் முழுவதற்கும் நான் செய்த செலவு 15 கோடி ரூபாய் என்று அந்தத் தயாரிப்பாளர் பெருமிதத்துடன் கூறினார்’
  ‘தமிழகம் முழுவதிலும் அயராமல் தேர்தல் பணிகளை மேற்கொண்ட தொண்டர்களுக்கு என் நெஞ்சார்ந்த நன்றி’