தமிழ் மூக்கால் அழு யின் அர்த்தம்

மூக்கால் அழு

வினைச்சொல்அழ, அழுது

 • 1

  (ஒருவர் தன்) குறையைக் கூறிப் புலம்புதல்.

  ‘எப்போது பார்த்தாலும் கையில் காசு இல்லை என்று மூக்கால் அழுகிறான்’
  ‘யாருமே தன்னைக் கவனிப்பதில்லை என்று பாட்டி மூக்கால் அழுவாள்’

 • 2

  (ஒன்றைச் செய்யவோ பிறருக்குத் தரவோ) மனமில்லாமல் இருத்தல்; தயங்குதல்.

  ‘பத்து ரூபாய் கொடுப்பதற்கே மூக்கால் அழுபவர், நூறு ரூபாய் தூக்கிக் கொடுத்துவிடுவாரா?’
  ‘இந்தச் சின்ன வேலையைச் செய்வதற்குக்கூட மூக்கால் அழாதே’