தமிழ் மூக்கு யின் அர்த்தம்

மூக்கு

பெயர்ச்சொல்

 • 1

  முகத்தில் இருப்பதும் சுவாசிப்பதற்கும் வாசனையை அறிவதற்கும் பயன்படுவதுமான ஒரு உறுப்பு.

 • 2

  (பறவையின்) அலகு.

  ‘கோழி குப்பையைக் காலால் கிளறி மூக்கால் புழுவைக் கொத்திற்று’
  ‘கிளி மூக்கு’

 • 3

  (சில பாத்திரங்களில்) திரவம் வருவதற்கு ஏற்ற வகையில் நீண்டிருக்கும் பகுதி.

  ‘கெண்டியின் மூக்கில் ஏதோ அடைத்துக்கொண்டிருக்கிறது’