தமிழ் மூக்கைச் சிந்து யின் அர்த்தம்

மூக்கைச் சிந்து

வினைச்சொல்சிந்த, சிந்தி

பேச்சு வழக்கு
  • 1

    பேச்சு வழக்கு சளி அடைத்திருக்கும் மூக்கிலிருந்து காற்றை வேகமாக வெளியேற்றிக் கையால் மூக்கை அழுத்திச் சளியை அகற்றுதல்.

    ‘மூக்கைச் சிந்திய பின்புதான் ஒழுங்காக மூச்சு விடவே முடிந்தது’
    ‘குழந்தைக்கு மூக்கைச் சிந்திவிடு’

  • 2

    பேச்சு வழக்கு (பெண்களைக் குறித்து வரும்போது) (நினைத்த மாத்திரத்தில்) கண்ணீர் விடுதல்; அழுதல்.