தமிழ் மூச்சு யின் அர்த்தம்

மூச்சு

பெயர்ச்சொல்

 • 1

  (உயிர் வாழ்வதற்கு) நுரையீரலுக்குள் இழுத்து வெளிவிடும் காற்று; சுவாசம்.

  ‘அந்தக் காட்சியைக் கண்டதும் மூச்சு விடக்கூட மறந்துபோய் அப்படியே பிரமித்து நின்றார்’
  ‘அடிபட்டவனின் மூக்கில் கைவைத்துப் பார்த்தேன். மூச்சு இல்லை’

 • 2

  நுரையீரலுக்குள் காற்றை இழுத்து வெளிவிடும் செயல்; சுவாசம்.

  ‘நோயாளிக்கு மூச்சு சீராக இருக்கிறது என்று மருத்துவர் தெரிவித்தார்’