தமிழ் மூச்சுவிடு யின் அர்த்தம்

மூச்சுவிடு

வினைச்சொல்-விட, -விட்டு

 • 1

  ஆசுவாசப்படுத்திக்கொள்ளுதல்.

  ‘இரண்டு மாதங்களாக வீட்டு வேலை வாட்டி எடுத்துவிட்டது. இன்றுதான் மூச்சுவிட கொஞ்சம் நேரம் கிடைத்திருக்கிறது’

தமிழ் மூச்சுவிடு யின் அர்த்தம்

மூச்சுவிடு

வினைச்சொல்-விட, -விட்டு

 • 1

  (எதிர்மறையில் அல்லது எதிர்மறைத் தொனியில்) (ஒன்றைப் பற்றி ஒருவரிடம்) தெரிவித்தல்.

  ‘அப்பாவிடம் பேனாவைத் தொலைத்ததுபற்றி மூச்சுவிடாதே!’
  ‘நேரில் சந்தித்தபோது தனக்கு வேலை கிடைத்ததுகுறித்து அவன் மூச்சுவிடவில்லை’