மூட்டு -க்காக தமிழ்

இல் உள்ள முக்கிய விளக்கங்கள் : மூட்டு1மூட்டு2மூட்டு3

மூட்டு1

வினைச்சொல்

 • 1

  (தீ) உண்டாக்குதல்/(அடுப்பில் நெருப்பு) பற்றவைத்தல்.

  ‘தீ மூட்டிக் குளிர்காய்ந்தனர்’
  ‘அடுப்பை மூட்டி உலை வைத்தாள்’

 • 2

  (சிரிப்பு, கோபம் முதலியவற்றை ஒருவருக்கு) உண்டாக்குதல்.

  ‘தண்ணீர் குடிக்கும்போது சிரிப்பு மூட்டாதே!’
  ‘உங்களுக்குள் சண்டை மூட்டிவிட்டது யார்?’

மூட்டு -க்காக தமிழ்

இல் உள்ள முக்கிய விளக்கங்கள் : மூட்டு1மூட்டு2மூட்டு3

மூட்டு2

வினைச்சொல்

வட்டார வழக்கு
 • 1

  வட்டார வழக்கு (சாக்கு, துணி முதலியவற்றில் இரு விளிம்புகள் இணையும்படி) சேர்த்தல்; சேர்த்துத் தைத்தல்.

  ‘மிக லாவகமாக நெல் சாக்குகளை மூட்டினான்’
  ‘கைலியை மூட்டித் தைத்துத் தர பத்து ரூபாயா?’

மூட்டு -க்காக தமிழ்

இல் உள்ள முக்கிய விளக்கங்கள் : மூட்டு1மூட்டு2மூட்டு3

மூட்டு3

பெயர்ச்சொல்

 • 1

  (எலும்புகளின்) இணைப்பு.

  ‘முழங்கால் மூட்டில் வலி’
  ‘‘மூட்டு விலகியிருக்கலாம்’ என்று முதலுதவி அளித்தவர் கூறினார்’