தமிழ் மூட்டை யின் அர்த்தம்

மூட்டை

பெயர்ச்சொல்

 • 1

  (தானியம், மணல், உரம் முதலியவை நிரப்பப்பட்டு) கட்டப்பட்ட அல்லது தைக்கப்பட்ட சாக்குப் பை.

  ‘கூடத்தில் நெல் மூட்டைகள் அடுக்கி வைக்கப்பட்டிருந்தன’
  ‘சர்க்கரை மூட்டை’
  ‘மிளகாய் மூட்டை’
  ‘வெள்ள அபாயத்தின் காரணமாக மணல் மூட்டைகளை அடுக்கிக் கரையைப் பலப்படுத்தினார்கள்’
  ‘இரண்டு சிமிண்டு மூட்டைகளைக் காணவில்லை’

 • 2

  (எடுத்துச்செல்ல வசதியாகப் புத்தகம், துணி முதலியவற்றை) கட்டிவைத்திருப்பது அல்லது பொதிந்துவைத்திருப்பது.

  ‘அழுக்குத் துணி மூட்டையை சைக்கிளில் வைத்திருந்தான்’
  ‘சிறுவர்கள் புத்தக மூட்டையைத் தூக்க முடியாமல் திணறுகிறார்கள்’

 • 3

  (வட்டாரத்துக்குத் தகுந்தாற்போல்) 56இலிருந்து 70 கிலோகிராம்வரை கொள்ளும் அளவு.

  ‘எத்தனை மூட்டை நெல் விளைந்தது?’
  ‘ஒரு மூட்டை அரிசி என்ன விலை?’

தமிழ் மூட்டை யின் அர்த்தம்

மூட்டை

பெயர்ச்சொல்