தமிழ் மூடாக்கு யின் அர்த்தம்

மூடாக்கு

பெயர்ச்சொல்

பேச்சு வழக்கு
 • 1

  பேச்சு வழக்கு முக்காடு.

  ‘மூடாக்கை எடுத்தால்தான் யாரென்று அடையாளம் தெரியும்’
  ‘வெயில் அதிகமாக இருந்ததால் குழந்தைக்கு மூடாக்குப் போட்டாள்’
  ‘திண்ணையில் மூடாக்குப் போட்டுக்கொண்டு தூங்குவது யார்?’

 • 2

  பேச்சு வழக்கு மூடப்பட்ட அல்லது மூடியிருக்கும் நிலை.

  ‘பெண்கள் குளிப்பதற்கு வசதியாகக் கொல்லைப்புறத்தில் தட்டி வைத்து மூடாக்குப் போட்ட தடுப்பு’