தமிழ் மூதாதை யின் அர்த்தம்

மூதாதை

பெயர்ச்சொல்

 • 1

  (ஒரு பரம்பரையில்) முன் வாழ்ந்தோர்.

  ‘அந்த மன்னன் எதிரிகளுடன் போரிட்டுத் தனது மூதாதையரின் நகரத்தை மீட்டான்’
  ‘இந்தத் தீவில் வசிப்பவர்களின் மூதாதையர்கள் வெகு காலத்துக்கு முன் பக்கத்துத் தீவினுள் இருந்த காடுகளில் வசித்துவந்தார்கள்’

 • 2

  பரிணாம வளர்ச்சியில் பிற உயிரினம் தோன்றுவதற்கு அடிப்படையாக ஒரு காலகட்டத்தில் இருந்த உயிரினம்.

  ‘மனிதனின் மூதாதையாக கொரில்லா இருந்திருக்கலாம்’