தமிழ் மூதேவி யின் அர்த்தம்

மூதேவி

பெயர்ச்சொல்

 • 1

  துரதிர்ஷ்டத்தை விளைவிப்பதாகக் கருதப்படும் பெண் தெய்வம்.

  ‘விவசாய நிலத்தை விற்றதிலிருந்து வீட்டில் மூதேவி புகுந்துவிட்டாள் என்று பாட்டி அடிக்கடி புலம்புவாள்’

 • 2

  ஒருவரைத் திட்டுவதற்குப் பயன்படுத்தும் சொல்.

  ‘பத்து மணிவரை தூங்காதே, மூதேவி!’
  ‘அந்த மூதேவி வந்துவிட்டானா?’