தமிழ் மூன்று சக்கர வண்டி யின் அர்த்தம்

மூன்று சக்கர வண்டி

பெயர்ச்சொல்

  • 1

    (ஊனமுற்றோர், காயமுற்றோர் போன்றோர் பயன்படுத்தும்) பின்புறம் இரண்டு சக்கரங்களையும், முன்புறம் ஒரு சக்கரத்தையும் பெற்றிருக்கும், கைகளால் இயக்கும் வண்டி.

    ‘காந்தி பிறந்த நாளை முன்னிட்டு ஊனமுற்றோருக்கு மூன்று சக்கர வண்டிகள் வழங்கப்பட்டன’

  • 2

    (பொருள்களைக் கொண்டு செல்லப் பயன்படும்) பின்புறம் இரண்டு சக்கரங்களையும், முன்புறம் ஒரு சக்கரத்தையும் பெற்றிருக்கும், கால்களால் மிதித்து இயக்கும் வண்டி.