தமிழ் மூலம் யின் அர்த்தம்

மூலம்

பெயர்ச்சொல்

 • 1

  ஆசனவாயின் ஓரத்திலோ உட்பகுதியிலோ ஏற்படும் மிகுந்த வலியை உண்டாக்கும் சிறு புடைப்புகள்.

தமிழ் மூலம் யின் அர்த்தம்

மூலம்

பெயர்ச்சொல்

 • 1

  (ஒன்று) தோன்றுவதற்கு அடிப்படை; ஆதாரம்.

  ‘இந்தப் பிரச்சினைக்குப் பல காரணங்கள் இருக்கலாம்; மூல காரணம் இதுதான்’
  ‘இந்தச் செய்திக்கு மூலம் ஒரு ஆங்கிலப் பத்திரிகை’
  ‘நிஜ வாழ்க்கையில் நடந்த ஒரு நிகழ்ச்சியை மூலமாக வைத்துதான் இந்தக் கதையை எழுதினேன்’

 • 2

  (பிரதிசெய்தல் முதலிய செயல்களுக்கு அடிப்படையாகக் கொள்ளப்படும்) முதலில் உருவாக்கப்பட்ட அல்லது தயாரிக்கப்பட்ட ஒன்று.

  ‘இந்த வீட்டுப் பத்திரத்தின் மூலம் என் அப்பாவிடம் இருக்கிறது’
  ‘இந்த ஓவியத்தின் மூலம் எங்கு இருக்கிறது?’

 • 3

  நூலாசிரியரால் எழுதப்பட்ட பாடம்.

  ‘இந்தப் புத்தகத்தில் சிலப்பதிகாரத்தின் மூலம் மட்டும் இருக்கிறது’
  ‘இந்தக் கதையை அதன் ஆங்கில மூலத்திலேயே படித்திருக்கிறேன்’

தமிழ் மூலம் யின் அர்த்தம்

மூலம்

பெயர்ச்சொல்

சோதிடம்
 • 1

  சோதிடம்
  இருபத்தேழு நட்சத்திரங்களில் பத்தொன்பதாவது.

தமிழ் மூலம் யின் அர்த்தம்

மூலம்

இடைச்சொல்

 • 1

  ஒன்று நிகழ்தல், ஒன்றைச் செய்தல், ஒன்றை அடைதல் முதலியவை மற்றொன்றின் வழியாக நடைபெறுவதைக் காட்டும் இடைச்சொல்.

  ‘பேராசிரியரோடு தொலைபேசிமூலம் தொடர்புகொள்ள முயன்றேன்’
  ‘ஆழ்துளைக் கிணறுமூலம் நிலத்தடி நீரை எடுத்து விவசாயத்திற்குப் பயன்படுத்துகிறார்கள்’
  ‘இடி விழுந்தால் மின்சாரம் இடிதாங்கிமூலம் நிலத்தில் இறங்கிவிடும்’
  ‘எழுத்து மூலமாக உத்தரவு தர வேண்டும் என்று அதிகாரியைக் கோரினார்’