தமிழ் மூலாதாரம் யின் அர்த்தம்

மூலாதாரம்

பெயர்ச்சொல்

 • 1

  (ஒன்றுக்கான) அடிப்படை.

  ‘சகல ஆற்றல்களுக்கும் மூலாதாரம் சூரியன்தான்’
  ‘மூலாதாரப் பொருள்களின் பற்றாக்குறை’
  ‘கற்பனைதான் படைக்கும் திறனின் மூலாதாரம் என்று தன் சொற்பொழிவில் அவர் கூறினார்’

 • 2

  முதுகுத்தண்டின் கீழ்ப்புறம் அமைந்திருப்பதாகவும் குண்டலினி சக்தி புறப்படும் இடமாகவும் கருதப்படும் ஆதார நிலை.