தமிழ் மூள் யின் அர்த்தம்

மூள்

வினைச்சொல்மூள, மூண்டு

 • 1

  (தீ) பற்றுதல்.

  ‘ஆலையில் மூண்ட நெருப்பைத் தீயணைப்புப் படையினர் அணைத்தனர்’

 • 2

  (தகராறு, கலவரம் முதலியவை) ஏற்படுதல்.

  ‘எல்லைப் பிரச்சினையினால் இரு நாடுகளுக்கு இடையே போர் மூள வாய்ப்பு இருக்கிறது’
  ‘இந்திரா காந்தி சுடப்பட்டதை அடுத்து நாட்டின் பல இடங்களில் கலவரம் மூண்டது’
  ‘வாய்க்கால் பிரச்சினையால் இரு ஊருக்கும் இடையே பிளவு மூண்டது’
  ‘அண்ணன் தம்பிகளுக்குள்ளேயே பகை மூண்டு சண்டையிட்டுக்கொள்கிறார்கள்’

 • 3

  (கோபம், சந்தேகம், ஆசை, சிரிப்பு முதலியவை) உண்டாதல் அல்லது எழுதல்.

  ‘அவன் பார்க்கும் பார்வையைக் கவனித்ததுமே அவருக்குச் சந்தேகம் மூண்டது’
  ‘அவர் நடையைப் பார்த்ததுமே எனக்குச் சிரிப்பு மூண்டது’
  ‘சாதாரண விஷயத்தைப் பெரிதுபடுத்திப் பேசினால் எரிச்சல் மூளாதா?’