தமிழ் மூளி யின் அர்த்தம்

மூளி

பெயர்ச்சொல்

 • 1

  (பெண்களைக் குறித்து வரும்போது) (மங்கலத் தோற்றத்துக்கு உரியதாக நம்பப்படும் ஆபரணங்கள், குங்குமம் முதலியவை இல்லாமல்) வெறுமையாகத் தோற்றமளிக்கும் நிலை.

  ‘கல்யாணத்திற்கு மூளிக் கழுத்துடனா போவது?’

 • 2

  (ஒன்று) உடைந்து அல்லது சிதைந்து காணப்படும் நிலை.

  ‘முனை உடைந்து மூளியாகிக் கிடந்தது உளி’
  ‘சிதைந்து மூளியாகக் கிடந்த சிற்பங்கள்’