தமிழ் மெதுவாக யின் அர்த்தம்

மெதுவாக

வினையடை

 • 1

  வேகமோ அவசரமோ இல்லாமல்; குறைவான வேகத்தில்.

  ‘வண்டி மெதுவாகச் சென்றது’
  ‘‘ஓடாமல் மெதுவாக நட’ என்று அம்மா அதட்டினாள்’

 • 2

  உடனடியாக இல்லாமல்; சற்றுப் பொறுத்து.

  ‘அந்த வேலையை மெதுவாகச் செய்யலாம். முதலில் இவருக்கு வேண்டியதைக் கொடுத்து அனுப்பு’

 • 3

  சத்தம் அதிகம் இல்லாமல்; குறைவான சத்தத்தில்.

  ‘ஏன் கத்துகிறாய்? மெதுவாகப் பேசு!’
  ‘பாட்டு மெதுவாகக் கேட்டுக்கொண்டிருந்தது’

 • 4

  பிறர் கவனத்தை ஈர்க்காத முறையில்.

  ‘அப்பா கோபமாக இருப்பதைப் பார்த்தவன் மெதுவாக நழுவினான்’
  ‘அவனுடன் பேச வேண்டாம் என்று என் தங்கை மெதுவாகச் சைகை செய்தாள்’

 • 5

  முரட்டுத்தனமாக இல்லாமல்; மென்மையாக.

  ‘குழந்தையை மெதுவாகத் தூக்கு’
  ‘கட்டிலை மெதுவாக நகர்த்து’