தமிழ் மென்னியைப் பிடி யின் அர்த்தம்

மென்னியைப் பிடி

வினைச்சொல்பிடிக்க, பிடித்து

  • 1

    (ஒரு பிரச்சினை, வேலை முதலியவை ஒருவருக்கு) மிகுந்த நெருக்கடியை ஏற்படுத்துதல்.

    ‘கடன் மென்னியைப் பிடிக்கிறது. எப்படி மீள்வது என்றே தெரியவில்லை’
    ‘சீக்கிரம் புத்தகத்தை வெளியிட வேண்டும் என்பதால் ஒரு மாதமாக மென்னியைப் பிடிக்கிற வேலை’
    ‘கடன்காரர்கள் மென்னியைப் பிடிக்கிறார்கள். இந்த நேரத்தில் யார் பணம் கொடுத்து உதவுவார்கள்?’