தமிழ் மென்மை யின் அர்த்தம்

மென்மை

பெயர்ச்சொல்-ஆக, -ஆன

 • 1

  தொடுவதற்குப் பஞ்சுபோல இருக்கும் தன்மை; மிருது.

  ‘குழந்தைக்கு ரோஜா இதழ் போன்ற மென்மையான உதடு’
  ‘மேனியின் மென்மை’

 • 2

  (தொடுவதில்) மெதுவான முறை.

  ‘தூங்கும் குழந்தையின் தலையை மென்மையாகத் தடவிக்கொண்டிருந்தாள்’

 • 3

  அதிகச் சத்தம் இல்லாத தன்மை.

  ‘மென்மையான இசை’
  ‘‘நான் உங்களுக்கு உதவலாமா?’ என்று மென்மையாகக் கேட்டாள்’

 • 4

  கடுமையான செயலால் எளிதில் பாதிக்கப்படும் தன்மை.

  ‘அவரது மென்மையான மனம் புண்படும்படியாக ஏதாவது கூறியிருப்பாய்’

 • 5

  (உணர்வுகளைக் குறித்து வரும்போது) கடுமையாக இல்லாமல் மனத்துக்கு இதமாகவும் மகிழ்ச்சியளிக்கக்கூடியதாகவும் இருப்பது.

  ‘கதாநாயகி தன் காதலை ஒரு பார்வைமூலம் மிகவும் மென்மையாக வெளிப்படுத்துகிறாள்’
  ‘வண்ணதாசனின் பெரும்பான்மையான கதைகள் அன்பு, காதல் போன்ற மென்மையான உணர்வுகளை மையமாகக் கொண்டவையாகும்’