தமிழ் மெய் யின் அர்த்தம்

மெய்

பெயர்ச்சொல்-ஆக, -ஆன

 • 1

  உண்மை.

  ‘நான் சொல்வது மெய்தான்’
  ‘அது மெய்யோ பொய்யோ எனக்குத் தெரியாது’

தமிழ் மெய் யின் அர்த்தம்

மெய்

பெயர்ச்சொல்-ஆக, -ஆன

உயர் வழக்கு
 • 1

  உயர் வழக்கு உடம்பு; உடல்.

 • 2

  இலக்கணம்
  உயர் வழக்கு குரல்வளையிலிருந்து வரும் காற்று உயிரொலியின்றி ஒலிக்கப்பட முடியாத ஒலி.