தமிழ் மெய்சிலிர் யின் அர்த்தம்

மெய்சிலிர்

வினைச்சொல்-சிலிர்க்க, -சிலிர்த்து

  • 1

    (வியப்பு, மகிழ்ச்சி முதலியவற்றால்) கிளர்ச்சி அடைதல்; பரவசம் அடைதல்.

    ‘உலகக் கோப்பைக் கால்பந்துப் போட்டியில் மரடோனாவின் சிறப்பான ஆட்டத்தைக் கண்டு மெய்சிலிர்த்தேன்’
    ‘பக்தியுடன் திரண்டு வரும் பக்தர்கள் இறைவன் சந்நிதியில் மெய்சிலிர்த்து நிற்கும் காட்சி!’