தமிழ் மெல்லிய யின் அர்த்தம்

மெல்லிய

பெயரடை

 • 1

  பருமனாகவோ தடிமனாகவோ இல்லாத.

  ‘மெல்லிய நூல்’
  ‘மெல்லிய துணி’

 • 2

  (சத்தத்தைக் குறித்து வரும்போது) மிகக் குறைவான அல்லது அதிகமாக இல்லாத.

  ‘அவருக்குப் பின்னாலிருந்து மெல்லிய சிரிப்பொலி கேட்டது’
  ‘மெல்லிய குரலில் சாந்தமாகப் பதிலளித்தார்’

 • 3

  மென்மையான.

  ‘அவள் மெல்லிய புன்னகையுடன் என்னைப் பார்த்துக்கொண்டிருந்தாள்’