தமிழ் மெலிது யின் அர்த்தம்

மெலிது

பெயர்ச்சொல்-ஆக, -ஆன

 • 1

  பருமனாகவோ தடித்ததாகவோ இல்லாமல் மெல்லியதாக இருப்பது.

  ‘வாழைக்காயை மெலிதாக நறுக்கிக்கொள்ளவும்’
  ‘நம் உடலில் உள்ள நரம்புகள் மெலிதான பல இழைகளால் ஆனவை’
  ‘மெலிதான உடல்’

 • 2

  (குறிப்பிட்ட நிலை, உணர்வு போன்றவற்றைக் குறித்து வரும்போது) தீவிரமாகவோ அதிகமாகவோ இல்லாமல் மிகக் குறைவாகவும் லேசாகவும் இருக்கும் தன்மை.

  ‘மனத்திற்குள் நம்பிக்கை மெலிதாகத் தலைதூக்கியது’
  ‘என்னைப் பார்த்ததும் அவள் உதடுகளில் மெலிதாக ஒரு புன்னகை தோன்றியது’
  ‘மெலிதான குரலில் அவர் என்னை அழைத்தார்’
  ‘மெலிதான அசைவு’
  ‘மனத்தினுள் மெலிதான ஏமாற்றம்’
  ‘கதவை மெலிதாகத் தட்டினான்’
  ‘எனது கைகளை மெலிதாகப் பற்றினாள்’
  ‘உடம்பு மெலிதாய் நடுங்கியது’
  ‘மெலிதான குளிர் காற்று’