வினைச்சொல்
- 1
(வீடு, நெற்களம் போன்றவற்றின் மண்தரையைச் சுத்தம் செய்யும் விதமாகச் சாணக் கரைசலால்) தேய்த்துப் பூசுதல்.
‘அடுப்பை மெழுகிக் கோலம் போடு’‘வெள்ளிக்கிழமையானால் வெளித் திண்ணையையும் மெழுக வேண்டும்’‘வீடு மெழுகுவதற்காகச் சாணியைக் கரைத்துக்கொண்டிருந்தாள்’ - 2
(கூடை, முறம் போன்றவற்றில் காணப்படும் சிறுசிறு இடைவெளிகளை அடைப்பதற்காகச் சாணக் கரைசல், காகிதக் கூழ் போன்றவற்றால்) பூசுதல்.
‘கூடை, முறம் எல்லாவற்றையும் மெழுக வேண்டும்’
பெயர்ச்சொல்
- 1
கொழுப்பிலிருந்து அல்லது எண்ணெயிலிருந்து தயாரிக்கப்படுவதும் எளிதில் உருகுவதுமான பொருள்.
‘மெழுகு திட நிலையிலிருந்து திரவ நிலைக்கு மாறுவதற்கு வெப்ப ஆற்றல் தேவைப்படுகிறது’‘கச்சா எண்ணெயைச் சுத்திகரிக்கும்போது மெழுகு கிடைக்கிறது’‘பாடலைக் கேட்டு மெழுகுபோல் உருகிவிட்டார்’