தமிழ் மொட்டை யின் அர்த்தம்

மொட்டை

பெயர்ச்சொல்-ஆக, -ஆன

 • 1

  (தலையில்) முடி முழுவதுமாக மழிக்கப்பட்ட நிலை.

  ‘குழந்தையின் மொட்டைத் தலையில் சந்தனத்தைத் தடவினார்’
  ‘யார் அந்த மொட்டைத் தலை ஆசாமி?’

 • 2

  பேச்சு வழக்கு மொட்டை அடித்திருக்கும் நபர்.

  ‘இரண்டு மொட்டைகள் சத்தமாகப் பேசியபடி போய்க்கொண்டிருந்தார்கள்’
  ‘‘ஏய் மொட்டை, இங்கே வா!’ என்று அவர் கூப்பிட்டதும் அவனுக்குக் கோபம் வந்துவிட்டது’

 • 3

  மரம், செடி அல்லது ஒரு பரப்பு, பொருள் போன்றவற்றில் குறிப்பிட்ட அம்சங்கள் ஏதும் இல்லாத நிலை.

  ‘மழையில்லாமல் எல்லா மரமும் மொட்டையாக நிற்கின்றன’
  ‘அங்கு மொட்டைக் கோபுரத்துடன் பழங்காலத்துக் கோயில் ஒன்று இருந்தது’
  ‘முருங்கைக்கீரை பறித்துக்கொள்கிறேன் என்று மரத்தையே மொட்டையாக்கிவிட்டான்’

 • 4

  (கேள்வி, பதில் போன்றவற்றைக் குறித்து வரும்போது) தேவையான விளக்கம் இல்லாத தன்மை.

  ‘அகராதி வாங்க வேண்டும் என்று மொட்டையாகச் சொன்னால் போதாது’
  ‘பால்காரர் வேலு வீடு என்று சொல்லாமல் மொட்டையாக வேலு வீடு என்று சொன்னதால் எனக்குப் புரியவில்லை’
  ‘இது போன்ற மொட்டையான குற்றச்சாட்டுகளை நாங்கள் ஏற்றுக்கொள்ள மாட்டோம்’