தமிழ் மொட்டையடி யின் அர்த்தம்

மொட்டையடி

வினைச்சொல்-அடிக்க, -அடித்து

  • 1

    தலைமுடியை முழுதுமாக மழித்தல்.

    ‘திருப்பதிக்குப் போய் மொட்டையடித்துக்கொண்டு வந்தான்’

  • 2

    (ஒருவரிடம் இருக்கும் பணம், பொருள் முதலியவற்றை மற்றவர்) முழுவதுமாக இல்லாமல் செய்தல்.

    ‘வீடு கட்டித்தருகிறேன் என்று சொல்லி என் நண்பன் என்னை மொட்டையடித்துவிட்டான்’