மொத்தம் -க்காக தமிழ்

இல் உள்ள முக்கிய விளக்கங்கள் : மொத்தம்1மொத்தம்2

மொத்தம்1

பெயர்ச்சொல்

 • 1

  (கணக்கிட்டுப் பார்த்தபின்) எல்லாவற்றையும் சேர்த்துக் கிடைக்கும் எண் அல்லது தொகை.

  ‘மொத்தச் செலவு ஆயிரம் ரூபாய்’

 • 2

  முழுமை.

  ‘குறுகிய காலத்திற்குள் மொத்தமாக மாறிவிட முடியுமா?’
  ‘விளைந்தது மொத்தமும் விற்பனைக்குத்தானா?’

 • 3

  (பொருள்களை நுகர்வோரிடம் நேரடியாகவோ சில்லறையாகவோ விற்காமல் விற்பனையாளரிடமே) அதிக அளவில் விற்கும் முறை.

  ‘மொத்த வியாபாரி’
  ‘இங்கு பூண்டு மொத்தமாகவும் சில்லறையாகவும் கிடைக்கும்’
  ‘மொத்த விற்பனையாளர்’

மொத்தம் -க்காக தமிழ்

இல் உள்ள முக்கிய விளக்கங்கள் : மொத்தம்1மொத்தம்2

மொத்தம்2

பெயர்ச்சொல்

பேச்சு வழக்கு
 • 1

  பேச்சு வழக்கு பருமன்; தடிமன்.

  ‘பேனாவைப் பிடித்து எழுத முடியவில்லை. அவ்வளவு மொத்தம்!’