தமிழ் மொழிபெயர் யின் அர்த்தம்

மொழிபெயர்

வினைச்சொல்-பெயர்க்க, -பெயர்த்து

  • 1

    ஒரு மொழியில் எழுதப்பட்டதை அல்லது சொல்லப்பட்டதைப் பொருளும் தொனியும் மாறாமல் மற்றொரு மொழியில் வெளிப்படுத்துதல்.

    ‘சங்க இலக்கியத்திலிருந்து பல பாடல்களை ஏ.கே. ராமானுஜன் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்திருக்கிறார்’
    ‘பிரதமர் ஆங்கிலத்தில் பேசப்பேச, பக்கத்தில் நின்றுகொண்டிருந்தவர் தமிழில் மொழிபெயர்த்துக்கொண்டிருந்தார்’