தமிழ் மேடிடு யின் அர்த்தம்

மேடிடு

வினைச்சொல்மேடிட, மேடிட்டு

  • 1

    (அடித்து வரப்படும்) மண்ணால் (பள்ளம்) நிரப்பப்படுதல்.

    ‘வண்டல் அதிகமாகப் படிந்து ஏரிகள் மேடிட்டுவிட்டன’

  • 2

    (பெரும்பாலும் கன்னத்தில்) சுற்றியுள்ள பகுதியைவிடச் சதை அதிகமாதல்.

    ‘திருமணத்துக்குப் பிறகு அவளுக்குக் கன்னம் நன்றாக மேடிட்டுவிட்டது’